நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

Parliment in one site 800x534 1
Parliment in one site 800x534 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் விதமாக இன்று (21) நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலத்தப்பட்டது

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக, இன்று (21) காலை 8.45க்கு, நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அனைத்து மக்களிடமும் விடுத்த கோரிக்கைக்கு அமைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலின் இரண்டு ஆண்டுகால நினைவு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலங்களில் இன்றைய தினம் விசேட ஆராதனையுடன் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

அத்துடன், ஏனைய மத வழிபாட்டுத் தளங்களிலும் விசேட வழிபாடுகளுடன், அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

ஏப்ரல் 21 தாக்குதலின், இரண்டு ஆண்டுகால நினைவு தினத்தை முன்னிட்டு, நாடுமுழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது