மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஹரோயினுடன் இராணுவச் சிப்பாய் கைது

625.132.560.350.160.300.053.800.238.160.90
625.132.560.350.160.300.053.800.238.160.90

மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஹரோயின் போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட இராணவ சிப்பாய் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை (21) உத்தரவிட்டார்.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள நாவலடி இராணுவமுகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவரை சம்பவதினமான நேற்று செவ்வாய்கிழமை இரவு இராணுவமுகாமில் வைத்து 130 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப்பொருளுடன் கைது செய்தனர் .

இதில் கைது செய்யப்பட்டவரை இன்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 3 ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.