உயிரிழந்த விடுதலை புலிகள் உறுப்பினர்களின் பெயரில் மோசடி: நபரொருவர் கைது!

kaithu

நேற்றைய தினம் (22) வவுனியா பிரதேசத்தில் நபரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த விடுதலை புலி அமைப்பின் உறுப்பினர்களின் பெயரில் அடையாள அட்டை மற்றும் போலியான கடவுச்சீட்டுக்களை தயாரித்து நபர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சந்தேகநபர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.