வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானம்

c1acd1dc fe52 4182 af9d 3c3e603cb588
c1acd1dc fe52 4182 af9d 3c3e603cb588

வவுனியாவில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கும் சுகாதாரநடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள், தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கொவிட் 19 தாக்கம் தொடர்பில் வவுனியாவின் தற்போதைய நிலை, மற்றும் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது போன்ற விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மகேந்திரன் கொவிட் தடுப்பு செயலணியின் இணைப்பாளர் மேயர் யெனரல் மகேஸ்பண்டார, பிரதி காவல்துறை மா அதிபர் லால் செனவிரத்தின, சுகாதாரவைத்திய அதிகாரிகள், காவல்துறையினர், போக்குவரத்து தரப்பினர், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.