நாட்டை முடக்குவது தீங்கு! தடுப்பூசிகள்தான் தீர்வு! – ஜனாதிபதி

gota
gota

கொவிட்-19 தொற்று நோய்க்கு தடுப்பூசிகள்தான் தீர்வு என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவான தடுப்பூசி இயக்கத்திற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்று கூறிய ஜனாதிபதி, முடக்கல் நிலையை விதிப்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறினார்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முன்வைத்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு இலங்கை மக்களுக்கு உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.