எல்லை மீறும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை நிறுத்தம்!

arre
arre

தற்போதைய கொவிட் 19 பரவல் காரணமாக நாட்டின் கடல் எல்லையை மீறும் இந்திய மீனவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் அந்த நாட்டு மீனவர்களை கைது செய்வது ஆபத்தினை ஏற்படுத்தும் என்பதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் கடல் எல்லையை மீறும் இந்திய மீனவர்களை மீண்டும் திருப்பி அனுப்பும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்களை கைது செய்து தடுப்பு காவலில் வைத்தால் அவர்கள் ஊடாக கடற்படையினருக்கு கொவிட்-19 தொற்று ஏற்படக்கூடிய அவதானம் ஏற்படும்.

அத்துடன் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை நாட்டுக்குள் அழைத்து வருவதன் ஊடாக மேலும் நெருக்கடி நிலையை அது தோற்றுவிக்கும்.

இதுபோன்ற காரணங்களால் நாட்டின் கடல் எல்லையில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.