திஸ்ஸமஹாராமவில் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் காயம்!

1550425922 shoot 2
1550425922 shoot 2

திஸ்ஸமஹாராம – கோஹோம்பகஹாபெலஸ்ஸ பகுதியில் நேற்று (25) பிற்பகல் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் தெபரவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 47 வயதான நிபுண சுத்தா என்பவரே காயமடைந்துள்ளதோடு துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.