ஈழமக்கள் ஜனநாயககட்சியின் உட்கட்சி மோதல்:உதவி செயலாளர் வைத்தியசாலையில்!

IMG 20210426 WA0002
IMG 20210426 WA0002

ஈழமக்கள் ஜனநாயககட்சியின் உறுப்பினர்களிற்கிடையில் நேற்று இரவு இடம்பெற்ற உட்கட்சி மோதலால் கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

IMG 20210426 WA0001


நேற்றையதினம் இரவு கட்சியின் உதவி மாவட்ட செயலாளருக்கும் இளைஞரணியினரை சேர்ந்த சிலருக்கும் கூமாங்குளம் பகுதியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 
இதனால் உதவி மாவட்ட செயலாளர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பாக வவுனியா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.