மன்னிப்பு கோரியது கதிரியக்க பொருளுடன் வந்த சீன கப்பலின் நிறுவனம்!

400px Container ships President Truman IMO 8616283 and President Kennedy IMO 8616295 at San Francisco
400px Container ships President Truman IMO 8616283 and President Kennedy IMO 8616295 at San Francisco

கதிரியக்க பொருளுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசித்த கப்பலின் உள்நாட்டு பிரதிநிதித்துவ நிறுவனம் தமது தவறை ஏற்று இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

நெதர்லாந்தில் இருந்து சீனா நோக்கி பயணித்த குறித்த கப்பல், கடந்த 20 ஆம் திகதி இரவு 9 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்திருந்தது.

இதன்போது கப்பலில் உள்ள பொருட்கள் தொடர்பில் துறைமுக அதிகாரசபைக்கு அறிவிக்க வேண்டி பொறுப்பு உள்ளூர் பிரதிநிதிகளுக்கு காணப்படுகின்றது.

எனினும் உள்ளூர் பிரிதிநிதிகள் அதனை உரிய முறையில் செய்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கப்பலில் கதிரியக்க பொருள் அடங்கியுள்ளமை துறைமுக அதிகாரசபை மற்றும் கடற்படையினரால் வெளிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அணுசக்தி சட்டத்தின் 18 மற்றும் 48ஆம் சரத்துகள் மீறப்பட்டமையினால் விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது.