றிசாட்பதியுதீன் கைதுக்கு மாந்தை கிழக்கு தவிசாளர் ம.தயானந்தன் கண்டனம்

IMG 20210430 120956 1
IMG 20210430 120956 1

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட்பதியுதீன் கைது தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ம.தயானந்தன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் ஊடக சந்திப்பு ஒன்றினை 30.04.21 அன்று நடத்தி கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும்தெரிவிக்கையில்

கட்சியின் தலைவர் கைதுசெய்யப்பட்டு உண்மைக்கு புறம்பான துன்பத்தினை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். பலதரப்பட்ட மக்கள் கண்டனத்தினையும் ஆர்ப்பாட்டத்தினையும் வெளியிட்டுள்ளார்கள் இது குறித்து அவரது மனைவியார் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்

இது குறித்து ஊடகங்கங்கள் ஊடாக ஜனாதிபதி அவர்களுக்கும் நீதித்துறைக்கும் அன்பான வேண்டுகோளினை விடுக்கின்றேன். ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை நாடாளுமன்றில் சபாநாயகரிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இந்த அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும் றிசாட்பதியுதீனின் பெயர் குறிப்பிடப்படவில்லை
இந்த கைது என்பது அரசியல் பழிவாங்கலாக இடம்பெற்றுள்ளது இந்த அரசு ஆட்சியினை தக்கவைப்பதற்காக ஊடகங்களின் வாயிலாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சிறுபான்மை சமூகத்தின் தலைவரின் கைது மூவின சமூகத்திற்கும் சேவை செய்த தொண்டின் கடந்த அரசிலும் அதற்கு முற்பட்ட அரசிலும் முன்னால் அமைச்சர் றிசாட்பதியூதின் என்ற பெயர் நாமமாக ஒலித்து அன்னிய செலாவணிகளை ஈட்டியுள்ளார்கள்.

மூவின மக்களுக்கும் வீட்டுத்திட்டங்களை நடைமுறைபடுத்தி சேவைசெய்துள்ளார். அநியாயமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தடுத்து வைத்திருப்பது அநீதி. இது ஒரு திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக நாங்கள் பார்க்கின்றோம்

முல்லைத்தீவு மாவட்டம் மீளக்குடியமர்ந்த பொழுது தற்போதைய பிரதமரின் தலைமையில் இருந்த அரசில் பாரிய ஒரு செயல் வீரராகவே பார்க்கப்பட்டது.

இவர் 52 நாள் அரசியல் குழப்பத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்றும் அதன் பின்னர் நடந்த தேர்தலில் இவரை ஒருசில இனவாத சக்த்திகளினை திருப்திப்படுத்த இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இது சிறுபான்மை சமூகத்தினுடைய எதிர்காலத்தில் இருக்கின்ற பலரையும் கைது செய்யப்படலாம் என்ற எச்சரிக்கை அண்மையில் தமிழ் சகோதரர்கள் ஐவர் கைது செய்தார்கள் எந்த முடிவும் இல்லை இது உண்மையில் வன்மையான கண்டனத்திற்குரிய விடையம் இந்த கைது தொடர்பில் விரைந்து ஜனாதிபதி அவர்களும் நீதித்துறையும் விரைந்து செயற்படவேண்டும் மக்கள் மத்தியில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ குரலை நசுக்கமுற்பட்டுள்ளதா என்று சந்தேகம் எழுகின்றது

அவரின் சிறப்புரிமை நிலைநாட்டப்படவேண்டும் உடனடியாக இந்த விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும்.ஒரு சிலரின் ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு இந்த கைது என்றுதான் நாங்கள் குறிப்பிடுகின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முற்று முழுதாக தமிழ்மக்களை கொண்ட அகில இலங்கை முஸ்லீம் காங்கிரசின் சபை ஊடகங்கள் ஊடாக கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் ம.தயானந்தன் தெரிவித்துள்ளார்.