வவுனியாவில் சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

IMG20210501104701 01
IMG20210501104701 01

வவுனியா நகர வீதிகளில் இன்று (01) விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறையினர் முககவசம் அணியாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாட்டில் கொவிட் 19 இன் மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் , முககவசம் அணியாதோர், முககவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.