பொய்யான செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பிய நபர் தொடர்பில் சிஐடி விசாரணை ஆரம்பம்!

CID news
CID news

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொய்யானதும் போலியானதுமான செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பிய நபர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அதாவது இன்று நள்ளிரவு முதல் மே மாதம் 17 ஆம் திகதி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

அந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் அவர் கூறினார்.

அவ்வாறான செய்தியை இணையத்தளங்களில் பதிவேற்றிய நபர்களை கண்டுப் பிடித்து அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.