கோதுமை மாவிற்கான வரி நீக்கம்

Wheat Flour
Wheat Flour

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கான வரி நீக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கோதுமை மாவிற்கு அறவிடப்பட்டு வந்த 36.00 ரூபா சுங்கவரி நீக்கப்பட்டு இதற்கு பதிலாக 1 கிலோ கிராமிற்கு 8 ரூபா விசேட வர்த்தக வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி
அமைச்சர் என்ற ரீதியில்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கமைய கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் இந்த விசேட வர்த்தக வரி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.