சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை பாராட்டிய மாவை சேனாதிராசா!

0001 2
0001 2

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற சரசாலையைச் சேர்ந்த மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசியமட்டத்தில் முதலிடத்தில் பௌதீக அறிவியல் பிரிவில் 2.942 ணு புள்ளிகள் பெற்றுச் சாதனை படைத்துள்ளமை பெரு மகிழ்ச்சியளிக்கின்றது. சுந்தர்பவன் ஒலிம்பியாட் போட்டியிலும் புலமைப்பரிசில் பெற்றவர் என்பதும் பெருமையேதான் என மாவை. சோ.சேனாதிராசா கடிதம் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வரலாற்றில் இலங்கைத் தமிழ் மக்கள் கல்வித் துறையிலும், விளையாட்டுத் துறையிலும், தொழில் துறையிலும், அரசதுறைகளிலும் நிர்வாகத் துறையிலும் வேற்றுக் கிரகங்கள் பற்றிய அமெரிக்க நாசா ஆய்வு செய்யும் ஏனைய பல துறைகளிலும் சாதனை படைத்தவர்களின் வரலாறுகளுண்டு.

அதே போல பல்கலைக் கல்வியில் கல்விபெற வெற்றி பெற்ற ஏனைய தமிழ் மாணவர்களையும் பாராட்டிநிற்கிறோம்.

இன விடுதலைக்கான போர்க்காலத்திலும் தமிழ்ப் பிரதேசங்களில் கல்வியில் எம் மாணவர்கள் பல வகையிலும் வெற்றிகள் பெற்றுள்ளனர். 2020 சென்ற ஆண்டுமுதல் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காலத்திலுங்கூட எம் மாணவர்கள் கல்வியில் தேர்வுகளில் சாதனை படைத்தமை வரலாற்றில் பதியப்பட வேண்டியதாகும்.

மாணவன் தனராஜ் சுந்தர்பவன் அவர் பெற்றோருக்கும், சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் மட்டுமல்லாமல் தமிழினத்திற்கும் புலமைகொண்டவர்கள் மத்தியிலும் சுந்தர்பவன் பெற்ற சாதனையையிட்டு அனைவரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.

எதிர்காலத்திலும் சுந்தர்பவன் பல சாதனைகளை நிகழ்த்தவேண்டுமெனவும் வாழ்த்தி நிற்கின்றோம்.