பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்யமாட்டேன்

Gotabaya Rajapaksa 1
Gotabaya Rajapaksa 1

அபிவிருத்தியை மேற்கொண்டு நாட்டில் மக்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை சில அரசியல்வாதிகள் செயற்படுத்த முடியாத திட்டங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பெரும்பான்மை மக்கள் விரும்பாத ஒன்றை எப்படி தமிழ் மக்களுக்கு கொடுப்பது எனவும் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அப்படி எதையும் கொடுப்பதாக கூறி ஏமாற்றக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என கூறினார்.

அத்தோடு அதிகாரப்பகிர்வு என்பது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் உளவுத்துறையை பலப்படுத்தி நாட்டில் பாதுகாப்பை வலுவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதிஉறுதிமொழி ஒன்றினையும்வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .