போதைப்பொருள் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை

nimal sripaladi silva
nimal sripaladi silva

போதைப் பொருட்களுக்கு அடிமையாகி கைதானவர்களை பிரிதொரு சிறையில் புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவிருப்பதாக நீதி மனித உரிமைகள் மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் சட்டத்தரணி நிமல் ஸ்ரீபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

பதுளை மகியங்கனை இயமகா விகாரையில் அமைச்சர் இது தொடர்பில் மேலம் உரையாற்றுகையில்;

பெரும்பாலும் சிறைக் கைதிகள் தம்மிடம் உள்ள தவறுகள் மாத்திரமன்றி சமூகத்தில் உள்ள தவறுகள் காரணமாகவும் சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைதிகளின் இந்த நிலைக்கு மொத்த சமூகமும் பொறுப்புகூற வேண்டும் என்றும் போதைப் பொருள் பாவனை தொடர்பான கைதிகளின் எண்ணிக்கை 105 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய அளவிலும் பாரக்க 3 மடங்கு தொகையினர் இருக்கின்றனர். இந்த நிலைக்கு காரணம் ஹெரொயின் போதைப்பொருளே காரணமாகும் என்றும் அவர் கூறினார்.