இலங்கையில் மேலும் 546 பேருக்கு கொரோனா!

rt PCR items laboratory hero
rt PCR items laboratory hero

இலங்கையில் மேலும் 546 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,851 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 119,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.