வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா!

How is COVID 19 Changing eCommerce Retail Businesses guest post 1
How is COVID 19 Changing eCommerce Retail Businesses guest post 1

யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 807 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 பேரும் கிளிநொச்சியில் 7 பேரும், முல்லைத்தீவில் ஒருவரும் என 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நான்கு பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரும் தொற்றாளர்களுடன் முதல்நிலைத் தொடர்புடையவர்கள்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரில் இருவர் தொற்றாளர்களுடன் முதல்நிலையத் தொடர்புடையவர்கள். இருவர் வீதி சீரமைப்புப் பணியில் ஈடுபடுவர்கள்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரண்டு முதியவர்கள் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாண மாநகர் யாழ். வீதி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண். மற்றையவர் இளவாலையைச் சேர்ந்த 75 வயதுடைய பெண்.

இதன்மூலம் கொரோனா நோயினால் யாழ்ப்பாணத்தில் 21 பேரும் வடக்கு மாகாணத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.