காத்தான்குடியில் முக கவசம் அணியாத 20க்கு மேற்பட்டோர் கைது!

IMG 2489
IMG 2489

மட்டக்களப்பு காத்தான்குடியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மற்றும் வீதிகளில் பிரயாணிப் போர் முக கவசம் அணிந்துள்ளனரா என காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (07) இரவு விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையில் முக கவசம் அணியாத 20 பேருக்கு மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

தற்போது நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை தடுப்பதற்கான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பிரதேச செயலகங்கள், காவல்துறையினர், இராணுவத்தினர், பொதுச் சுகாதார அதிகாரிகள் ஒன்றினைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நோன்பு பொருநாளை முன்னிட்டு வர்தகநிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதையடுத்து காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி சுமிந்த நயனசிறி தலைமையில் காவல்துறையினர் மற்றும் செட்டிபாலயம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான இராணுவத்தினர் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை ஒன்றினை இரவு 7 மணிக்கு ஆரம்பித்தனர்.

இதன்போது வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்டு அங்கு முக கவசம் அணியாது வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் வீதியால் பிரயாணித்தோர் உட்பட 20க்கு மேற்பட்டோரை கைது செய்ததுடன் வர்த்த நிலையங்களில் அதிகளான மக்களை உள்வாங்கிய வர்த்தகர்களை எச்சரித்தனர் இந்த சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை சுமார் இரண்டு மணித்தியாலம் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.