23 மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் பதிவு!

corona 1
corona 1

நேற்றைய தினம் (08) நாட்டின் 23 மாவட்டத்தில் இருந்து கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.

இவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பில் மாத்திரம் நேற்றைய தினம் 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி பகுதியில் மாத்திரம் 60 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், பிலியந்தலையில் 43 பேருக்கும், மொரட்டுவையில் 31 பேருக்கும், கல்கிஸ்ஸை, மிரிஹான பகுதிகளில் தலா 21 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 347 பேருக்கு தொற்று உறுதிப் படுத்தப்பட்டுளளது.

கம்பஹா மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக களுத்துறை மாவட்டத்தில் நேற்றைய தினம் 358 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் பாணந்துறை தெற்கு பகுதியில் மாத்திரம் 88 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுடன், பாணந்துறை வடக்கில் 66 பேருக்கும், களுத்துறை வடக்கில் 25 பேருக்கும், ஹொரணையில் 22 பேருக்கும், இங்கிரிய பகுதியில் 20 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

காலி மாவட்டத்தில் 188 பேரும், இரத்தினபுரியில் 172 பேரும், குருநாகலையில் 75 பேரும், கண்டியில் 70 பேரும், நுவரெலியாவில் 45 பேரும், மாத்தளையில் 32 பேரும் அம்பாறையில் 25 பேரும், திருகோணமலையில் 19 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இலங்கையில் 1,896 புதிய தொற்றாளர்கள் பதிவான நிலையில அதில் 6 பேர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 02 ஆம் திகதியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 88 பேர் கொவிட் தொற்றாளர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 786 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 492 பேர் ஆண்கள் எனவும் 294 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.