மேலும் 26 கொரோனாமரணங்கள்: 3 மாத குழந்தையும் பலி!

corona deth
corona deth

நாட்டில் நேற்று 26 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொவிட் மரண எண்ணிக்கை இதுவாகும்.

இதில் 3 மாத குழந்தையொன்றும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது