தேடுதல் வேட்டையில் புலனாய்வு அதிகாரிகள்!

5cda447d 4915c508 0949a5d0 be9ed279 corona virus 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
5cda447d 4915c508 0949a5d0 be9ed279 corona virus 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

இலங்கையில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் நெருங்கிப் பழகியவர்களைத் தேடி புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

200 பேரைக் கொண்ட புலனாய்வு அதிகாரிகள், நாடு பூராகவும் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு அந்த நபர்களைத் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய தொற்றாளர்கள் புதிய வகை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு உறுதிப்படுத்தியிருந்தது.

இந்த வைரஸ் மற்றைய வைரஸை விடவும் பரவும் வேகம் அதிகமானது என்றும் ஆய்வுக்குழு குறிப்பிட்டிருந்தது.

இதன்படி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் தொடர்புகளைப் பேணிய மற்றும் நெருக்கமான நபர்களைத் தேடி புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.