இலங்கையர்களுக்கு சர்வதேச விண்வெளி ஓடத்தை காணும் வாய்ப்பு

E1PUipwWUAAwcCT
E1PUipwWUAAwcCT

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் இன்றைய தினம் இரவு பார்வையிடலாம்.

அதன்படி மேகங்கள் அல்லாத தெளிவான வான் பரப்பில் இன்றிரவு 7.08 மணி தொடக்கம் 07.14 மணிவரையான காலப் பகுதியில் இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் இதனை பார்வையிட முடியும்.

பூமியிலிருந்து 400 க்கும் மேற்பட்ட கிலோ மீற்றர் தொலைவில் மிதந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் தென் – கிழக்கு திசையிலிருந்து வட – கிழக்கு திசையை நோக்கி பயணிக்கும்.

அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளன. இந்த நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வில் ஈடுபடுவது வழக்கம்.