உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!

IMG20210517171412 01 1
IMG20210517171412 01 1

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று (17.05) தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெறவுள்ளது.

தீர்த்தம் எடுக்க செல்பவர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவல்துறையினருக்கு விபரம் கொடுக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் ஆறுபேர் தடைசெய்யப்பட்ட நிலையில் தீர்த்தம் எடுத்துள்ளார்கள் முன்னதாக முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்த்தம் எடுப்பதற்காக கிரியைதாரர்கள் உள்ளிட்டவர்கள் பூசை வழிபாடுகளுடன் சென்றுள்ளார்கள்.
பக்த்தர்களின் வரவினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர், பொதுசுகாதர பரிசோதகர்கள், இராணுவத்தினர் ஆகியோர் ஈடுபட்டு மக்கள் கூட்டத்தினை கூடாதவாறு கட்டுப்படுத்தியுள்ளார்கள்.

நடைபயணமாகவே கிரியைதாரர்கள் தீர்த்தம் எடுக்க செல்வது வழமை மக்கள் கூட்டத்தினை தவிர்க்கும் முகமாக இம்முறை உழவியந்திரத்தில் சென்று தீர்த்தம் எடுத்துள்ளார்கள். தீர்த்தம் எடுக்கும் தீர்த்தக்கரையில் மக்கள் மற்றும் பக்த்தர்கள் எவரும் கலந்துகொள்ளாதவாறு படையினர் காவல்துறையினர், பிராந்திய சுகாதார பணிமனையினர் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளார்கள். எடுக்கப்பட்ட தீர்த்தம் முள்ளியவளை காட்டுவிநாயாகர் ஆலயம் கொண்டு செல்லப்பட்டு அங்கு பூசை வழிபாடுகளை தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை 24.05.21 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் நிகழ்விற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.