யாழில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கத்தின் அஞ்சலி நிகழ்வு

VideoCapture 20210518 180033
VideoCapture 20210518 180033

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் கதிர்காமத்தம்பி துரைரட்ணசிங்கத்தின் அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் கதிர்காமத்தம்பி துரைரட்ணசிங்கத்தின் அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைச் செயலகத்தில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் துரைரட்ணசிங்கத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.