எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தினார்

IMG 20210518 WA0099
IMG 20210518 WA0099

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றையதினம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முள்ளிவாய்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான இன்று பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டுவரும் நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது அலுவலத்திலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக அதிகமான இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.