ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – வவுனியா பிரதேச சபை உறுப்பினர்

IMG 1356
IMG 1356

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் துஸ்யந்தன் விக்டர்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா ஆடைத் தொழிற்சாலையை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களோடு செயல்பட வலியுறுத்தி வருகிறேன் தொடர்ச்சியாகவே, ஆனால் இதன் விளைவு தெரியாமல் பாரிய ஒரு கொத்தணியாக உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகிறது.

நேற்று மூன்று கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் அவதானமாக செயல்பட வேண்டிய அரசு இதை ஒரு பொருட்டாகவே எண்ணிப் பார்ப்பதில்லை. அவர்களைை பொறுத்தமட்டில் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் அடிமைகள் என்றுதான் எண்ணுகிறார்கள் போல.

ஒருவேளை இது ஒரு கொத்தணி பரவலாக அமையுமாக இருந்தால் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அத்தனை அரசியல்வாதிகள், சுகாதாரத் திணைக்களம் போன்றவையே ஆகும்.

இதில் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களை மாத்திரமே இவர்கள் பணிக்கு உட்படுத்தி கொள்ளலாம்.அல்லது விரும்பியவர்கள் பணிக்கு வரலாம் என்ற நிபந்தனையுடன் வரவழைக்கலாம். உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தான் வேண்டும் ஆனால் அதைவிட உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்