கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம்!- வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ff5c7799 3fc87969 c00ec29a fishering 850x460 acf cropped 850x460 acf cropped
ff5c7799 3fc87969 c00ec29a fishering 850x460 acf cropped 850x460 acf cropped

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 23ஆம் திகதி தாழமுக்க நிலை மேலும் வலுவடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னார் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவும் எனவும், காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் வரையிலான கடற்பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலி தொடக்கம் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் காங்கேசன்துறை ஊடான கடற்பிராந்தியத்திலும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.