வவுனியா பெரியார்குளம் வீதிகளில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

6d184b9d 3e55 4d7f 8109 e55c90100d8e
6d184b9d 3e55 4d7f 8109 e55c90100d8e

வவுனியா பெரியார்குளம் உள்வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடான நிலை உருவாகியுள்ளதுடன் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

பூந்தோட்டம் பெரியார்குளத்திலிருந்து தாண்டிக்குளம் செல்லும் உள்வீதி ஓரங்களில் பொதுமக்களால் அதிகப்படியான கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன.

வீட்டுக்கழிவுகள், மலக்கழிவுகள், கோழிக்கழிவுகள், என்பன அப்பகுதிகளில் வீசப்படுவதால் வீதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன், அவ் வீதிகளால் அசௌகரியத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு வீசப்படும் கழிவுகள் ஓடும் நீரினாலும்,விலங்குகள், பறவைகளால் காவிச் செல்லப்பட்டு, பரவி கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடான நிலமை உருவாகியுள்ளதுடன் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டிகளில் வருகைதரும் ஒரு சில நபர்களே தொடர்ச்சியாக அப்பகுதிகளில் குப்பைகளை வீசி சீர்கேட்டை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து உள்ளூராட்சி சபைகள் கவனம் செலுத்தி கழிவு முகாமைத்துவத்தை சரியான முறையில் ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுப்பதுடன், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.