அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையில் 20க்கு20 கிரிக்கெட் தொடர்!

unnamed 7
unnamed 7

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த வருடம் இலங்கை அணியுடன் 20க்கு20 கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது.

2021 – 2022ம் பருவகாலத்துக்கான அவுஸ்திரேலிய அணியின் போட்டித் தொடர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

ஆஷெஸ் கிண்ணத்துக்கு மேலதிகமாக, ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர்களிலும் அவுஸ்திரேலியா விளையாடவுள்ளது.

இதன்படி இலங்கைக்கு எதிராக 5 போட்டிகளைக் கொண்ட 20க்கு20 கிரிக்கெட் தொடரில் அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியா விளையாடுகிறது.

இந்த தொடரின் முதலாவது போட்டி அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி சிட்னியில் நடைபெறும்.