தேசிய கண் வைத்தியசாலை செல்வதை தவிருங்கள்

download 2 13
download 2 13

நாட்டில் தொடரும் கொவிட்-19 பரவல் காரணமாக தேசிய கண் வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வைத்தியசாலை முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

நோயாளர்கள் தங்களது கண்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு, அருகிலுள்ள அரச வைத்தியசாலையின் கண் நோய் சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் தெரிவித்துள்ளது.

அதேவேளை தொடர் சிகிச்சைப் பெறும் நோயாளர்கள் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.