250 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

kaithu
kaithu

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் நீண்டகாலமாக வத்தளை, மட்டக்குளி, முகத்துவாரம் மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.