ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தில் திருத்தம் வேண்டும் – நிமல்

eee7513df45af2309874c2f110ca7e10 XL 735x400
eee7513df45af2309874c2f110ca7e10 XL 735x400

ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இதனூடாக, ஜனாதிபதித் தேர்தலில், தேவையற்ற முறையில் போட்டியிடுவதை தடுக்க முடியும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, பல்வேறு தரப்பினர் தேவையற்ற முறையில் களமிறங்கியதன் ஊடாக, அரசாங்கத்திற்கு பாரிய செலவு ஏற்பட்டது.

இதன்காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருந்தது. இதனைக் கருத்திற் கொண்டே, புதிய சட்டங்களை உருவாக்கவுள்ளோம்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதனை மறுசீரமைப்பு செய்து நாடாளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானித்துள்ளோம்’ எனக்குறிப்பிட்டுள்ளார்.