திருகோணமலையில் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது!

Tamil News large 2336087
Tamil News large 2336087

திருகோணமலை – இறக்ககண்டி பகுதியில் வெடிப்பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை காவல்துறைக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் இறக்ககண்டி பகுதியை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்பொருட்களை பயன்படுத்தி குறித்த இரண்டு பேரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்ககூடும் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.