நாட்டில் உள்ளவர்கள் சுமுகமாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்- சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

c.ranavakka
c.ranavakka

யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க எமது நாடு கடந்த காலங்களில் பல இன்னல்களை சந்தித்தது. கிளர்ச்சி, உள்நாட்டு போர் காரணமாக பல பாதிப்புகளைச் சந்தித்தோம்.

வடக்கில் மட்டும் மக்கள் கொன்றொழிக்கப்படவில்லை. தெற்கிலும் 60 ஆயிரம் இளைஞர் யுவதிகள் கொன்றொழிக்கப்பட்டனர். இந்த பாதிப்புக்களினால் தமிழர்கள் அதிகமாக கனடாவிலும் சிங்களவர்கள் அதிகமாக அவுஸ்திரேலியாவிற்கும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். எனவே நாட்டில் உள்ளவர்கள் புலபெயர் நாடுகளுக்கு தப்பிச் செல்லாது இங்கு வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.

யாழ்ப்பான மாநகர மண்டப கட்டட நிர்மாணம் அரசியல் நோக்கம் கொண்டு செய்யப்படவில்லை. அதில் எவ்வித குறுகிய சிந்தனைகளும் இல்லை.

மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு நடைமுறை சாத்தியமான விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.