வவுனியாவில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

DSC04056
DSC04056

பயணத்தடை காரணமாக வவுனியா கற்குளத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாது காணப்பட்ட மக்களுக்கு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

160 குடும்பங்களுக்கு இவ்வாறு உணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு பால்மா பைக்கற்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது வவுனியா அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன, கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ். விஸ்னுதாசன் உட்பட கிராம சேவகர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.