சீரற்ற வானிலை காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

டடட
டடட

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மரணித்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

இருவர் காணாமல் போயுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மையத்தினால், இன்று (06) காலை வெளியிடப்பட்ட அனர்த்த நிலவர அறிக்கையில், இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

10 மாவட்டங்களில், 60,674 குடும்பங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி முதலான மாவட்டங்களே சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.

14 வீடுகள் முழுமையாகவும், 817 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

3,520 குடும்பங்களைச் சேர்ந்த, 15,658 பேர், 72 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலையால், கம்பஹா மாவட்டமே இதுவரையில் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

39,742 குடும்பங்களைச் சேர்ந்த, 161,383 பேர் கம்பஹாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக, கொழும்பு மாவட்டத்தில், 11,33 குடும்பங்களைச் சேர்ந்த, 46,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், கேகாலை மாவட்டத்தில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.

அங்கு 5 பேர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.