கமத் தொழில் அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்!

Agriculture Ministry
Agriculture Ministry

கமத் தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ரோஹண புஷ்பகுமார தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாவலபிட்டிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணத்திற்காக அவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கமத் தொழில் அமைச்சின் புதிய செயலாளராக வயம்ப பல்கலைகழகத்தின் உபவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.