எட்டு (08) மாவட்டங்களில் டெங்கு அபாயம்!

e718c4cc3cf1141266e6a02d03759fb5 XL
e718c4cc3cf1141266e6a02d03759fb5 XL

நாட்டில் தற்போது நிலவும் அதிக மழையுடனான காலநிலையால் எட்டு (08) மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனக் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது எனத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும் கடந்த மே மாதத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தால் நீர் தேங்குவதன் காரணமாக எதிர்வரும் ஒரு மாதத்தில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை நாட்டில் 7 ஆயிரத்து 873 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.