சைபர் தாக்குதல் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய நபர் கைது!

kaithu

ஜனாதிபதி அலுவலகத்தின் இணையத்தளம் உட்பட சில அரச இணையத்தளங்களில் பாரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரினால் சமூக வலைத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாக கூறி பகிரப்பட்ட பொய்யான தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (07) மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், குறித்த சந்தேக நபர் இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.