மழையால் உயர்வடைந்தது மரக்கறிகளின் விலை

download 11
download 11

நாட்டில் தற்பொழுது காணப்படும் மழையுடனான வானிலை காரணமாக மத்திய மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் மரக்கறி செய்கை பாதிக்கபட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அந்த மாகாணத்தில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதுடன் வியாபாரிகளும், நுகர்வோரும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான மரக்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதற்கமைய இந்த முறை அந்த மாவட்டங்களில் செய்கை பண்ணப்பட்ட மரக்கறிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடும் மழைக் காரணமாக விவசாயிகள் தமது விளைச்சல்களை பாதுகாக்க பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மத்திய மாகாண கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரசன்ன பல்லேமுல்ல தெரிவித்தள்ளார்.

எவ்வாறாயினும் பாதுகாப்பான கூடாரங்களில் பயறிடப்பட்ட மரக்கறி வகைகள் மாத்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு மாகாணத்தின் அனைத்து விவசாயிகளும் தமது பயர்களை பாதுகாத்தால் நிலவும் மரக்கறி தட்டுப்பாட்டை கையாளக்கூடிய நிலைமை உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் காலநிலை குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் விவசாயிகளை கேட்டுள்ளார்.அங்கு மேற்கொள்ளப்படும் மரக்கறி செய்கை 50 வீதம் பாதிக்கபட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.