மட்டக்களப்பில் 60வது வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பித்து வைப்பு!

IMG 3706
IMG 3706

மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (9) மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த, அரசாங்க அதிபர் க.கருணாகரன் ஆரம்பித்து வைத்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 25 ஆயிரம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பித்துவைத்து அதில் அரசாங்க உத்தியோகத்தர்கள், காவற்துறையினர் உட்பட 750 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

IMG 3693

இதனையடுத்து தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதிகளான திருச்செந்தூர் விபுலானந்தாவித்தியாலயம், கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயம் , நாவற்குடா கிழக்கு சாரதா வித்தியாலயங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ பிரதானி 23 வது படைப்பிரிவின் அதிகாரி மேஜர் ஜெனறல் நலின் கொஸ்வத்த, 231 வது படைப்பிரிவின் பிறிகேட் அதிகாரி வீ.எம்.என்.எட்டியாராச்சி, அரசாங்க அதிபர் க.கருணாகரன் ஆரம்பித்துவைத்தனர். இதேவேளை காத்தான்குடி பிரதேசத்ததில் அரச உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.

IMG 3663