நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா

Kadhar Mastan 850x460 acf cropped
Kadhar Mastan 850x460 acf cropped

அன்டிஜன் பரிசோதனையில் வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு நாடாளுமன்ற உறுப்பினரிடம் பி.சிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று (10) வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.