ஓய்வூதியக் கொடுப்பனவு பெறுவதற்காக வவுனியாவில் இராணுவ பாதுகாப்புடன் வங்கிகளுக்கு அழைத்து வரப்பட்ட முதியவர்கள்

IMG20210610101313 01
IMG20210610101313 01

வவுனியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பாகங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஜூன் 10 மற்றும் 11 திகதிகளில் ஒய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

IMG20210610100618 01

இந்நிலையில் ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டைகளை பயணக்கட்டுப்பாட்டில் அனுமதி பத்திரமாக உபயோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஓய்வூதிய  கொடுப்பனவு பெறுவோர் தமக்குரிய கொடுப்பனவினை வங்கிகளில் பெறவுள்ள நிலையில் தற்போதுள்ள பயணத்தடையின் காரணமாக ஓய்வூதியக் கொடுப்பனவை பெறுவோர் தமது கொடுப்பனவினை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, வன்னி இராணுவ கட்டளைத் தளபதியின் ஏற்பாட்டில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் இராணுவத்தினரால் வாகன ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

IMG20210610101648 01

இதனையடுத்து தற்போதுள்ள கொரோனா இடர் நிலையினை கருத்திற்கொண்டு  முதியோருக்கு  ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் முகமாகவும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாகவும்  வவுனியாவிலுள்ள வங்கிகளுக்கு இன்றையதினம் (10.06) காலை இ.போ.ச பேரூந்துகள், இராணுவ வாகனங்களில்  ஓய்வூதியக் கொடுப்பனவை பெறுவோர் அழைத்து வரப்பட்டனர்.

IMG20210610102302 01

இதன்போது, சீரான முகக்கவசம் அணியாதவர்களுக்கு  இராணுவத்தினரினால் முகக்கவசங்கள் வழங்கி  வைக்கப்பட்டதுடன் இயலாமையினால் கஸ்டப்பட்ட முதியவர்களை கையைப்பிடித்து இராணுவத்தினர் அழைத்தும் சென்றனர்.