சுவிஸ் அதிகாரி விவகாரம்- சுவிஸ் தூதரக குழு இலங்கை விஜயம்

swiss
swiss

சுவிற்சர்லாந்து தூதர பணியாளர் விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு சுவிசர்லாந்து உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளது.

சுவிஸ் பணியாளரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் எடுத்த முடிவு குறித்து அரசு கூறும் எந்த தகவலையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லையென சுவிசர்லாந்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்;

இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவரான ஜோர்ஜ் ப்ரீடனே இவ்வாறு இலங்கை வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த அனுபவமிக்க இராஜதந்திரி தலைமையில், கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பாதுகாப்பு சம்பவத்தை தெளிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட உள்ளன. சுவிஸ் பெடரல் வெளியுறவுத் துறை தனது ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மிக முக்கியமானது என்று கருதுகிறது. மேலும் நடவடிக்கைகளில் இவை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது இலங்கை அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சரை வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட உள்ளூர் பணியாளரை விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலில் வைப்பதென்ற நீதிமன்றம் எடுத்த முடிவுக்கு, காசிஸ் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இலங்கை அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த சம்பவத்தை தெளிவுபடுத்த சுவிசர்லாந்து ஆர்வமாக இருப்பதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார். அதனால்தான் அனுபவமிக்க இராஜதந்திரி, முன்னாள் தூதர் ஜோர்க் ப்ரீடென் கொழும்புக்கு அனுப்பப்பட்டார். ப்ரீடென் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, சாத்தியமான தீர்வுகளை ஆராய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.