இன்றும் 2000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று!

300px COVID 19 Nurse cropped
300px COVID 19 Nurse cropped

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,232 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 218,366 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 184,090 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல், நாட்டில் இதுவரையில் 2,011 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.