வவுனியாவில் அதிரடியாக செயற்பட்ட அதிகாரிகள்

DSC 0436
DSC 0436

வவுனியாவில் அதிரடியாக செயற்பட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் : 9 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல்

நாடு மற்றும் சம்பா ரக அரிசிகளுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ நாடு மற்றும் சம்பா ரக அரிசியின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 98 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு நேற்றையதினம் (19.12.2019) வர்த்தகமானி அறிவித்தல் ஊடாக நாடு மற்றும் சம்பா ரக அரிசிகளுக்கான இந்த அதிகபட்ச சில்லறை விற்பனை விலை நிர்ணயம் வெளியிட்டப்பட்ட நிலையில் வவுனியாவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் அதிரடியான செயற்பாட்டில் இறங்கியிருந்தனர்.

வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் இன்று (20.12.2019) காலை 9.30 மணி தொடக்கம் வவுனியா நகர் முழுவதும் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் அரிசி விலை தொடர்பிலும் கவனத்தினை செலுத்தியிருந்தனர்.

இவ் சோதனை நடவடிக்கையின் போது அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தமை , விலைப்பட்டியலில் அதிக விலை பிரசுரித்திருந்தமை , காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை , பற்றுச்சிட்டு வழங்காமை , பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்தமை , விலை மற்றும் காலாவதி திகதி பொறிக்கப்படாத நிலையில் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஒன்பது வர்த்தக நிலையங்களிலிருந்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் பொருட்கள் கையகப்படுத்தப்பட்டன.

குறித்த ஒன்பது வர்த்தக நிலையத்திற்கு எதிராக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரினால் 2020 ஜனவரி மாதம் 07ம் திகதி வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் பல வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமையுடன் பல வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.