இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்

VideoCapture 20210615 141414
VideoCapture 20210615 141414

ஊர்காவற்துறை சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

32 அடி நீளமான கரையொதுங்கிய குறித்த திமிங்கலத்தை காலை 8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர்.

தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் திமிங்கலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.