அம்பாறை திருக்கோவிலில் சுகாதார விதி முறைகளை மீறிய 08 பேர் கைது

pp5
pp5

அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணக்கட்டுப்பாடு மற்றும் அரசின் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறிய 08 நபர்கள் திருக்கோவில் காவற்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் கொவிட் 19 தடுப்பு செயலணிக் குழு நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய சுற்றிவளைப்பு ஒன்றினை இராணுவ மோட்டார் படையணியின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து இருந்தனர்.

pp4

இதன்போது திருக்கோவில் பிரதேசத்தில் பிரதான வீதிகள் மற்றும் உள் வீதிகளில் அரசின் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காது வீதிகளில் சுற்றித்திரிந்த நபர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இதேவேளை விநாயகபுரம் கடற்கரை வீதியில் காட்ஸ் விளையாடிக் கொண்டு இருந்த கும்பல் ஒன்றினையும் இராணுவ மோட்டார் சைக்கில் படையணியின் உதவியுடன் திருக்கோவில் காவற்துறையினர் கைது செய்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

pp2

இவ் அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஒழுங்குபடுத்தலில் கீழ் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் திருக்கோவில்காவல் நிலையப் பொறுப்பதிகாரி பி.கே.திலகரெத்தின இராணுவத்தின் மோட்டார் சைக்கில் படையணியினர் திருக்கோவில் பிரதேச கொவிட் தடுப்பு செயலணியின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இவ் திடிர் சுற்றிவளைப்பு மற்றும் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.