பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் கொரோனா நிவாரணம்

FB IMG 1623841277920 1
FB IMG 1623841277920 1

இந்த வருடத்துக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை, வன்னி மாவட்டத்தில் பட்டினியில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், பிரதமருக்கு, அவர், இன்று (16) அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வருடாந்தம் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியை, கொரோனா தொற்று காரணமாகவும், பயணக் கட்டுப்பாடு காரணமாகவும் வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியில் வாடும் ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும், இவ்வருடம் பட்டினிச் சாவுகளை தடுக்க இந்நிதிகளை பயன்படுத்துமாறும், குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அபிவிருத்தித் திட்டங்களை அடுத்த வருடமும் முன்னெடுக்க முடியும். பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டை கையாளும் நிதி அமைச்சர் என்ற வகையில் எனது பத்து மில்லியன் ரூபாய் நிதி மட்டுமல்லாமல், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் 2250 மில்லியன் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டையும் அந்தந்த மாவட்ட கொரோனா நிதிக்காக, விடுவிப்பது காலத்தின் தேவையாகும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், பிரதமருக்கு, அவர், இன்று (16) அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வருடாந்தம் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியை, கொரோனா தொற்று காரணமாகவும், பயணக் கட்டுப்பாடு காரணமாகவும் வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியில் வாடும் ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும், இவ்வருடம் பட்டினிச் சாவுகளை தடுக்க இந்நிதிகளை பயன்படுத்துமாறும், குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அபிவிருத்தித் திட்டங்களை அடுத்த வருடமும் முன்னெடுக்க முடியும். பன்முக நிதி ஒதுக்கீட்டை கையாளும் நிதி அமைச்சர் என்ற வகையில் எனது பத்து மில்லியன் ரூபாய் நிதி மட்டுமல்லாமல், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் 2250 மில்லியன் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டையும் அந்தந்த மாவட்ட கொரோனா நிதிக்காக, விடுவிப்பது காலத்தின் தேவையாகும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.